இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள்

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான ‘கூழாங்கல்’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இந்த படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

அதுமட்டுமில்லாமல் திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரீலீசில் அமிதாஷ் பிரதான் மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவான ‘பரம்பொருள்’ ஆஹா ஓடிடியில் காணலாம். மேலும் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ மற்றும் ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ஆகிய திரைப்படங்களை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம். அதோடு அமேசான் ப்ரைம் தளத்தில்  ஹமரேஷ் நடித்துள்ள ‘ரங்கோலி’  வெளியாக உள்ளது. ராம் பொதினேனியின் ‘ஸ்கண்டா’ (Skanda) தெலுங்கு படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.