சுதா இயக்கத்தில் சூர்யா43-யின் டைட்டில் வெளியானது!

நடிப்பின் நாயகர் சூர்யா மற்றும் இயக்குநர்  சுதா கோங்கராவின்  இரண்டாவது கூட்டணியாக உருவாகும் சூர்யாவின் 43வது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைக்க உள்ளார். இது அவருக்கு இசையமைப்பாளராக 100வது படம்  என்பது குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் இதில் முக்கிய  கதாபாத்திரமாக இணைந்துள்ளனர்.

ஏற்கனவே சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி. பிரகாஷ் ஆகிய மூவரின் கூட்டணியில் வெளியான ‘சூரரைப் போற்று’ மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் சூர்யா 43 படத்திற்கான டைட்டில் “புறநானூறு” என அறிவிக்கப்பட்டுள்ளது.