பிரிமியர் மில்ஸ் குழும் சார்பில் ரூ. 4 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

பிரிமியர் மில்ஸ் குழுமத்தின் சார்பில் கோவை வரதராஜபுரத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியில்  புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

ஜவுளி மற்றும் நூற்பாலைத்துறையில் முன்னணி நிறுவனமான பிரிமியர் மில்ஸ் குரூப் ஆஃப் கம்பெனிகள், சார்பில்  காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியுடன் இணைந்து அதன் பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளது.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கோயம்புத்தூர் சரக டிஐஜி, சரவண சுந்தர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். அவர் பேசுகையில், கோவை மாநகர பகுதியில் பள்ளி மாணவர்களுக்காக சிறத்த கட்டமைப்புடன் கூடிய பள்ளி கட்டிடத்தை இலவசமாகக் கட்டி கொடுத்த  பீரிமீயர் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போதைய காலகட்டத்தில்  செல்போன் உபயோகத்தை மாணவர்கள், ஆசிரியர்கள், பொற்றோர்கள் குறைத்து கொள்ள வேண்டும் என காவல்துறை சார்பில் வலியுறுத்துகிறேன். செல்போனிற்கு வரும் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ் அப்பில் வரும் லிங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும்,  பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின்  போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் நாம் அனைவரும் உறுதி மொழி எடுக்க வேண்டும் என்றார்.

விழாவில் பிரிமியர் மில்ஸ் குழும இயக்குநர் கவிதா சந்திரன் பேசியதாவது, தரமான கல்வியின் மூலம் முன்னேற்றத்தினை ஊக்கவித்து, எதிர்காலத் தலைமுறைனருக்கு அதிகாரமளித்தே பிரிமியர் மில்ஸ்  நிறுவனத்தின் நோக்கமாகும்.

புதிதாகத் திறக்கப்பட்ட பள்ளிக் கட்டிடம், முன்னேற்றம் மற்றும் புதுமைகளில் மிளிரும் கலங்கரை விளக்கமாக, ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் கல்வி சாதனைகளை ஊக்கவிக்கும் வகையில்  அமைகிறது.  கட்டிடத்தின் ஒவ்வொரு அம்சமும் பள்ளி ஆலோசகரின் உதவியுடன் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

“கல்வியே உலக மாற்றத்திற்கான மிகச்சிறந்த ஆயுதமாகும்” எனும் நெல்சன் மண்டேலாவின் பொன் மொழிக்கிணங்க,  பிரிமியர் மில்ஸ் குழும நிறுவனங்கள் இந்தப் புதுமையான பள்ளிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக ரூபாய். 4 கோடி நிதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி” என்பது தமிழக அரசின் கல்வித் திட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவரும் திட்டமாகும். இந்த அரசு உதவி பெறும் பள்ளியுடன் இணைந்து உலகத்தரம் வாய்ந்த இந்த பள்ளி கட்டிடத்தைக் கட்டி முடித்துள்ளோம் என்றார்.

இதில் காந்தி நினைவு நூற்றாண்டு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவகுமார், பிரிமியர் மில்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் ஜெகதீஷ் சந்திரன், இயக்குநர்கள் சபிதா சந்திரன், ஸ்ரீனிவாசன், சாந்தி சீனிவாசன், கவிதா சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.