கே.பி.ஆர் கல்லூரியில் நவராத்திரி உற்சவம் கோலாகலம்!

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் நவராத்திரி உற்சவம் கொண்டாடப்பட்டது.

கடந்த அக்டோபர் 15 முதல் 20 வரை நடைபெற்ற நவராத்திரி வழிபாட்டு நிகழ்வுகள்.,

சக்தியைச் சாமுண்டியாகப் போற்றும் வகையில், முதல் நாள் வழிபாட்டு நிகழ்வு அமைந்தது.
வாராஹியைப் போற்றும் இரண்டாம் நாள் நிகழ்வினை, கல்லூரியின்,அறிவியல் மற்றும் கலைப்புலத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வழிபாட்டு நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் முனைவர் கீதா வாழ்த்துரை வழங்கினார். அல்கெமி பப்ளிக் பள்ளியின் முதல்வர் முனைவர் விஜயலக்ஷ்மி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். பூஜையினைத் தொடர்ந்து ம்பத்தாட்டம்,பெருஞ்சலங்கையாட்டம்,பரதம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மாணவர்களால் நடத்தப்பட்டன.

சந்திரகாந்தவினை போற்றும் மூன்றாம் நாள் வழிப்பாட்டு நிகழ்வு வணிகவியல் புலத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.முதல்வர் முனைவர் பி.கீதா மற்றும் வணிகவியல் புலமுதன்மையர் முனைவர் குமுதாதேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கருமத்தாம்பட்டி ஸ்ரீ அபிவர்ஹா மருத்துவமனையின் மருத்துவர் திருமதி.ரம்யா செல்வரத்தினம் சிறப்பு விருந்தினராக இவ்வழிபாட்டில் கலந்துகொண்டார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வைஷ்ணவியைப் போற்றும் நான்காம் நாள் நிகழ்வு கணினி அறிவியல் புலத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் முனைவர் கீதா மற்றும் கணினி அறிவியல் புலமுதன்மையர் முனைவர் ஷர்மிளா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இப்பூஜைக்கு திருப்பூர் ஸ்ரீ சாரதா பள்ளியின் முதல்வர் முனைவர் மணிமலர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். வழிபாட்டிற்குப் பிறகு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.

மகேஸ்வரி தேவியினைப் போற்றி ஐந்தாம் நாள் வழிபாடு மேலாண்மை புலத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வர் முனைவர் கீதா வாழ்த்துரை வழங்கினார். சூலூர் ஆர்.வி.எஸ் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் முனைவர் ரஞ்சனி அவர்கள் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு வழிபாட்டினைச் சிறப்பித்தார்,தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கவுமாரி தேவியின் வழிபாடும் ,ஆயுத பூஜை வழிபாடும் ஆடைவடிவமைப்புத்துறை, நிர்வாகப்பணியாளர்கள் மற்றும் தொழில் வளர்ச்சித் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வழிபாட்டுப் பூஜையில் கல்லூரி முதல்வர் முனைவர் கீதா தலைமையேற்று வழிபாட்டு சிறப்புரை வழங்கினார். சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நவராத்திரி உற்சவத்தில் கல்லூரி முதல்வர், புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள்,பேராசிரியர்கள்,நிர்வாகப்பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு அம்பிகையின் அருள்பெற்றார்கள்.