கோவையில் 2024-25க்கான ரோட்டரி மாவட்டச் செயலகம் திறப்பு!

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3201-ன் புதிய மாவட்ட செயலகம் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் புதன்கிழமை திறக்கப்பட்டது.

இந்நிகழ்வினை ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3000-ன் ஆளுநர் (தேர்வு) Rtn. ராஜா கோவிந்தசாமி மற்றும் மாவட்டத்தின் ஆளுநர் Rtn. விஜயக்குமார் ஆகியோர் தலைமை வகித்து ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3201-ன் ஆளுநர் (தேர்வு) Rtn. சுந்தரவடிவேலு முன்னிலையில் திறந்து வைத்தனர்.

மேலும், இந்த செயலகத்தில் இருந்து மாவட்ட ஆளுநர் மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய அதிகாரிகள் செயல்படுவார்கள்.

 

தன்னுடைய ஆளுநர் பதவி காலத்தில் என்னென்ன சமூக பணிகள் செய்ய திட்டமிட்டு உள்ளீர்கள் என Rtn. சுந்தரவடிவேலு அவர்களிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது,

இந்த ரோட்டரி மாவட்டத்தின் பல பகுதிகளில் டயாலிசிஸ் பிரிவுகளை அமைத்து மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவ உதவிகளை வழங்க திட்டமிட்டு வருகிறோம்.குழந்தைகள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு இலவச இதய சிகிச்சை அளிக்கும் திட்டம் உள்ளது.

“அரசாங்கம் பொதுமக்களுக்கு பல்வேறு பயனுள்ள திட்டங்களை வழங்கியுள்ளது. எங்கள் தரப்பில், அரசு சேவைகள் சென்றடைய முடியாத இடங்களை நாங்கள் கண்டறிந்து, அங்கு சேவைகளை வழங்க முயற்சிப்போம்”., என கூறினார்.