செவிலியர்கள் ஒழுக்கத்தையும், கடின உழைப்பையும் கடைபிடிக்க வேண்டும்

கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு திங்களன்று துவக்க விழா என்.ஜி.பி கலையரங்கில் நடந்தது.

இவ்விழாவில் கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியின் முதல்வர்  மாதவி வரவேற்புரை வழங்கினார். அதில் கல்லூரியின் விதிமுறைகள், செவிலியர்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை பற்றி எடுத்துரைத்தார்.

விழாவில் பங்கேற்று சிறப்புரை வழங்கிய கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி  செவிலியர்கள் ஒழுக்கத்தையும், கடின உழைப்பையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்தி  உரையாற்றினார்.

தொடர்ந்து கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் தவமணி தேவி பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார். அப்போது தமது உரையில் உலகமெங்கும் செவிலியருக்கான கொட்டிக்கிடக்கும் பொன்னான வாய்ப்புகளை பற்றி எடுத்துரைத்தார்.

அதுமட்டுமில்லாமல் கல்லூரியின் முதன்மை கல்வி அலுவலர் புவனேஷ்வரன் மற்றும் டாக்டர் என்.ஜி.பி கல்லூரியின் கல்வி இயக்குனர் முத்துசாமி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவின் தொடர்ச்சியாக கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் மலர்விழி நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் 180 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.