தீபாவளி நெருங்கியாச்சு! இதோ முக்கிய ஷாப்பிங் டிப்ஸ்!

தீபாவளி பண்டிகை நெருங்கியாச்சு! ஊரெல்லாம் ஷாப்பிங் ஆஃபர் களைக்கட்ட தொடங்கிடுச்சு! அடுத்து பண்டிகைக்கு தேவையான  ஷாப்பிங்கை தொடங்குவது பற்றி தான் அனைவரும் ஆர்வமாக இருப்போம். இந்த நேரத்தில் உங்க ஷாப்பிங் அனுபவம் ஜாலியா இருக்கனும் ஆசை இருந்த  கண்டிப்பா இந்த டிப்ஸ் முயற்சி பண்ணி பாருங்க!!

ஷாப்பிங் செய்ய விரும்பும் நண்பர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள்:

பண்டிகை சமயத்தில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க பல்வேறு கடைகளில் சிறப்புத் தள்ளுபடி ஆஃபர்களை அறிவிப்பர். அதனை வாங்குவதற்கு ஷாப்பிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். இதனால், நீங்கள் வாங்கும் பொருட்கள்  அவர்களுக்கும் தேவையெனில் அந்த பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கி பயனடையலாம்.  இது உங்களது பணத்தை மிச்சப்படுத்த உதவுகிறது.

Consumers keen to shop during festive season: Study, Retail News, ET Retail

வார நாட்களில் ஷாப்பிங் :

பண்டிகை காலங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும். அதனைத் தவிர்த்து ரிலாக்ஸாக பிடித்த பொருட்களை தேர்வு செய்து வாங்க வேண்டும் என்றால் வார நாட்களில் ஷாப்பிங் செல்லுங்கள். மேலும், உடல் நலத்தில் பலவீனமானோர் வார இறுதி நாட்களில் ஷாப்பிங் செய்வதையும் , கடைசி நிமிட அவசரத்தையும் தவிர்த்து கொள்வது நல்லது.

விலைகளை ஒப்பிடுக : 

விழாக் காலங்களில் கலைக்கட்டும்  கடைவீதியில் ஷாப்பிங் செய்வதில் கிடைக்கும் இன்பம் தனித்துவமானது. ஒரு பொருளை அல்லது துணிகளை வாங்குவதற்கு முன் எப்போதும் வெவ்வேறு  விற்பனையாளர்களின் கடைகளில் விலைகளை ஒப்பிட வேண்டும் . இதனால், உங்கள் பணத்திற்கான பொருட்களை சிறப்புச் சலுகைகள் மூலம்  வாங்க முடியும்.

நீரேற்றத்துடன் இருங்கள்:

Tips to Keep Your Body Hydrated This Summer - HEALTHIANS BLOG

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கடை கடையாக ஏறி இறங்கி ஷாப்பிங் செய்தலே நம் உடல்  தானாகவே சோர்வடைந்து விடும்.  அந்நேரத்தில் உங்கள் உடலிற்கு தேவையான தண்ணீரை சரியாக பருகி உங்களை உற்சாகமாக வைத்து கொள்ளுங்கள்.

கூட்டத்தைக் கவனியுங்கள்: 

பண்டிகை காலங்களில் கடைவீதிகள் நம்பமுடியாத அளவிற்குக் கூட்டமாக இருக்கும். தொற்றுநோய் விழிப்புணர்வு காலங்களில், தங்களின் பாதுகாப்பைக் கருதி முகக்கவசத்தை கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள்.

மேற்கண்ட குறிப்புகளின் படி நீங்கள் ஷாப்பிங் செய்து வந்தால்  பட்ஜெட், சுற்றுச்சூழல் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் நீங்கள் கவனம் செலுத்துவதோடு பாதுகாப்பான பண்டிகையை கொண்டாட வழிவகுக்கின்றது.