ரத்தினம் கல்லூரியில் மேலாண்மை விழா!

ரத்தினம் கலை கல்லூரியின் மேலாண்மைத் துறை,ரோட்ராக்ட் கிளப் மற்றும் யுவா கிளப் ஆகியவை இணைந்து அக்டோபர் 16 முதல் 18 ஆம் தேதி வரை மேலாண்மை விழா இம்ப்ரெஸ் 23 நடத்தின.

நிகழ்விற்கு, கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மேலாண்மை துறை தலைவர் மகேஷ் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

நிகழ்வின் முதல் நாள் சிறப்பு விருந்தினராக ராம்வின் இன்ஜினியரிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர் நாகேஷ்வர்குமார் கலந்து கொண்டார்.

மேலும், ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் மற்றும் தோற்றம் குறித்து எடுத்துரைத்தார். இதையடுத்து, 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், ஆய்வு அறிஞர்களால் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் நிகழ்வுகளில் மைண்ட் கேம்ஸ், வினாடி வினா மற்றும் ஆலோசனை நிறுவனப் பயிற்சியாளர் ரங்கராஜன் மற்றும் யார்ட்ஸ்டிக் டிஜிட்டல் சொல்யூஷன் நிறுவனர் மற்றும் தலைமை தொலைநோக்கு அதிகாரி முரளி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

நிகழ்வில் அட்மேனியா, மினிஸ்ட்ரோ, மைண்ட் பெண்டர், டெக் டூயல், ஸ்டார்ட்டன், காகஸ், கிரியேட்டிவ் கேன்வாஸ் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் பல்வேறு  கல்லூரிகளை சேர்ந்த 280-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பரிசு பெற்றனர்.