மாவட்ட அளவில் இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளி முதலிடம்

கோவை மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட அளவில் 2023-2024 கல்வியாண்டுக்கான பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடந்தது. இதில், பதினான்கு வயதினருக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் இடம் பிடித்தனர். மேலும், மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் விளையாடத் தேர்வாகி உள்ளனர். அதோடு, சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை வெற்றிச்செல்வம் என்ற மாணவர் தட்டி சென்றார்

இதனையடுத்து, இந்துஸ்தான் கல்வி நிறுவன செயலர் சரஸ்வதி கண்ணையன், இணைச்செயலர் பிரியா, பள்ளி முதல்வர் செண்பக வல்லி, பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் சாலமன் உள்ளிட்டோர் மாணவர்களை வாழ்த்தினர்.