கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ‘ஃபியஸ்டா-24’

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஃபியஸ்டா-24 என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப மற்றும் கலாச்சாரத் திருவிழா புதன்கிழமையன்று தொடங்கியது.

இதில் பல்வேறு பல்கலைக்கழகம், கல்லூரி, மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 90க்கும் மேற்பட்ட போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். விழாவை கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி ராமசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் சர்வதேச கல்வி, புதிதாக வெளியிடப்பட்ட புத்தகங்கள், பாரம்பரிய மற்றும் நவீனகால உணவு, ஆடை, அணிகலன் போன்ற பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாணவ மாணவிகளைக் கவரும் வகையில் விளையாட்டுகளும் இருந்தன. பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீதியில் ஜப்பானிய பாரம்பரிய ஆடைகள், நகைகள், மற்றும் கலாச்சாரம் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்கப்பட்டன. மேலும் மாணவர்கள் அந்த பாரம்பரிய ஆடையணிந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கேன சிறப்பு போட்டிகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாலை சூப்பர் சிங்கர் மானசி உள்ளிட்டோர் பங்கேற்ற ‘பேன்ட் வயோ’ இசை குழுவின் இரண்டு மணிநேர இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இரண்டாவது நாளில் திரைப்பட நடிகை அபர்ணா தாஸ், கோழிப்பண்ணை செல்லதுரை மற்றும் கள்வன் ஆகிய திரைப்பட குழுவினர் பங்கேற்றனர்.