மாசில்லா சுற்றுச்சூழல் உருவாக வேண்டும்!

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி, டார்க் எக்யூப்மென்ட் (TAARK Equipment) நிறுவனங்கள் இடையில் ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் வேளாண்மை பொறியியல் துறையில் புவிசார் பொறியியல் துறைகளின் சங்கம் துவக்க விழா மற்றும் TAARK Equipment நிறுவனத்தில் ஆராய்ச்சி & மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பார்க் கல்வி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் லக்ஷ்மணன் வரவேற்புரை வழங்கினார். அப்போது, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கிடைக்கும் பயன்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும், விழாவினை தலைமையேற்று நடத்திய பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி பேசுகையில்,  2020 ஆம் ஆண்டு புவிசார் பொறியியல் துறைகளின் சங்கம் துவக்க விழாவில் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார். அதோடு, வேளாண்மை துறைகளில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு கொடுக்கும் வகையில்,  வேளாண் துறை சார்ந்த மாணவர்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உயிரினங்கள் வாழ்வதற்கான மாசில்லா சுற்றுச்சூழல் உருவாக்க துணை நிற்க வேண்டும் என்றவர்.,

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள் வேளாண் உபகரணங்கள் ஆராய்ச்சியிலும், பயன்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், இந்தியாவுக்கான பணமா நாட்டின் தூதர் மற்றும் தூதரக ஜெனரல் யாசியேல் புரில்லோ, பனாமா நாட்டில் மரங்கள் வாழ்வதற்கு சட்ட உரிமை கொடுக்கின்றனர். அதுபோல்,  நாமும் நமது நாட்டின் மரங்களை காக்க வேண்டும் என்றார்.

இதனையடுத்து, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட TAARK நிறுவனத்தின் மேலாளர் கிருஷ்ண பிரசாத், வேளாண்மையில் ஆர்வம் கொண்டு வேளாண் பொறியியல் துறையில் பயிலும் மாணவர்களை வாழ்த்தினார். மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக TAARK நிறுவனம் தனது முழு ஒத்துழைப்பை கொடுக்கும் என்று கூறினார்.