தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தக்காளி, கத்தரி, வெண்டைக்காய் ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை ஆகியவை உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கின்றது. விவசாயிகள் தங்கள் நடவு முடிவுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தக்காளி 

tomato price decrease

வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2022-23) தமிழகத்தில் தக்காளி சுமார் 0.34இலட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 11.99 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். தற்போது கோவை மொத்த விலை சந்தைக்கு தக்காளி வரத்தானது அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களான சாவடி, தொண்டாமுத்தூர், புளுவாம்பட்டி பகுதிகள் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் வருகின்றது. வர்த்தக மூலங்களின்படி, தமிழகத்தில் தக்காளி அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டதால் சந்தையின் வரத்து அதிகமாக இருப்பதால் பற்றாக்குறை ஏற்படவில்லை.

 

கத்திரி 

கத்தரி சாகுபடி - அ முதல் ஃ வரை அனைத்தும் ஒரே இடத்தில்! - Brinjal cultivation

வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2022-23), கத்திரி 0.24 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.09 இலட்ச டன்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது. தமிழகத்தில், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கத்திரி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. வர்த்தக மூலங்களின்படி, தற்போது சந்தைக்குக் கத்திரியின் வரத்து நாச்சிபாளையம், ஆலந்துறை, ஒட்டன்சத்திரம், தேனி மற்றும் ஓசூரிலிருந்து வருகின்றது.

வெண்டை 

AGRICULTURE AND FARMING BUSINESS IDEAS வேளாண் மற்றும் வேளாண்மை வணிக  கருத்துக்கள்: August 2015

வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2022-23), வெண்டையானது 0.19 இலட்சம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 1.84 இலட்ச டன்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது. வர்த்தக மூலங்களின்படி, தற்போது, கோயம்புத்தூர் சந்தைக்கு வெண்டை வரத்தானது ஒட்டன்சத்திரம் மற்றும் உடுமலைபேட்டையிலிருந்து வருகின்றது.

விலை முன்னறிவிப்பு திட்டக்குழு, ஒட்டன்சத்திரம் மற்றும் கோயம்பத்தூர் சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி மற்றும் வெண்டை விலையில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. பொருளாதார ஆய்வு முடிவின்படி, அறுவடையின் போது (டிசம்பர் 2023) தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.15 முதல் 17 வரை, நல்ல தரமான கத்திரியின் விலை ரூ.22 முதல் 24 ஆகவும் மற்றும் தரமான வெண்டையின் விலை ரூ.18 முதல் 20 வரை இருக்கும் என்று அறியப்படுகிறது. பருவமழை மற்றும் பிறமாநிலங்களிலிருந்து வரத்து வருமாயின், காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதால் விவசாயிகள் அதற்கு ஏற்ப விதைப்பு முடிவுகளை  எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.