எல்லைகளுக்கு அப்பாற்பட்ட கே.பி.ஆர் கல்லூரியின் செயல்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி சார்பில்  மேலை நாட்டுக்கல்வி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களும் மாணவர்களும் மலேசிய நாட்டிற்கு கல்விப்பயணம் சென்றனர் . அதோடு மலேசியாவில் உள்ள சிகி பல்கலைக்கழகம் மற்றும் ஆசியா பசுபிக்  பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர். மேலும் லிங்கன் கல்லூரி சார்பில் நடந்த ஆசிரிய மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொண்டனர்.

சிகி பல்கலைக்கழகக்  கூட்டாண்மை ஒப்பந்தமானது எதிர்கால வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை நிறுவுவதற்கும், சர்வதேசக் கல்வி மற்றும் ஆராய்ச்சிசார் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் முக்கியத்துவம்  அளித்தது.ஆசியா பசுபிக்  பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தமானது 15 நாள் பயிற்சி வகுப்பில்   மாணவர்கள் கலந்துகொள்ள டிசம்பர் மாதம் மலேசியாவிற்கு செல்வதைக் குறிப்பிடுகிறது.

மலேசியா லிங்கன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு புகழ்பெற்ற ஆய்வு நிபுணர்களால்  ஆய்வுத்திறன்கள் மற்றும் ஆய்வு வழிமுறைகளை மேம்படுத்துவதற்காக பயிற்சிகள் நடத்தப்பட்டது.

இந்த கல்விப் பயணம் குறித்து கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கீதா கூறுகையில், ”  இந்த பயணத்தின் மூலம் ஆசிரியர்களும், மாணவர்களும் சர்வதேச அளவிலான  கல்வி மற்றும் ஆராய்ச்சியை குறித்து அறிந்துகொண்டனர். இதற்கு அயல்நாட்டு பல்கலைக்கழகங்களோடு மேற்கொண்ட ஒப்பந்தம் உதவியாக இருந்தது” என்றார்.