வி.எல்.பி. கல்லூரியில் விரிவுரையாடல் நிகழ்வு 

வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிகாம் சி எஸ் / ஐ டி துறை சார்பாக “தற்போதைய போக்குகளில் தொழில் நோக்கம்” என்ற தலைப்பில் விருந்தினர் விரிவுரை நடைபெற்றது

நிகழ்வில் கல்லூரி முதல்வர் சதீஷ்குமார் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக வழிகாட்டுதல் நிபுணர் தினேஷ்குமார் பங்கேற்றார். அவர் தனது உரையில், வணிகப்பட்டதாரிகளுக்கான தற்போதைய போக்குகள் மற்றும் வேலைகள் குறித்தும் முதலீடு மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்கள், பல்வேறு வாய்ப்புகளைப் பெறுவதற்கான நுணுக்கங்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தார். நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தையும் பல்வேறு திறமைகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.