கல்லுக்கும் மண்ணுக்கும் உயிரூட்டும் செயல் தான் கட்டிடப்பணி – கட்டிடக் கலைஞர் ரமணி சங்கர்

கோயம்புத்தூர் கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர் சங்கத்தின் ‘சிபாக தின விழா’ புதன்கிழமையன்று சிட்ரா அரங்கில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சங்கர் அண்ட் அசோசியேட்ஸ் தலைமை கட்டிடக் கலைஞர் ரமணி சங்கர் கலந்துகொண்டார். அதோடு சிறப்பு சொற்பொழிவாளராக ஹலோ எஃப்எம் ஜெயராம் பங்கேற்றார்.

மேலும் இவ்விழாவில் சிபாக தலைவர் சகாயராஜ், செயலாளர் ரம்யா செந்தில், ஒருங்கிணைப்பு குழு தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் சிறப்புரை வழங்கிய ரமணி சங்கர், “பில்டிங் என்பது கட்டுமான பொருட்களையும், மனிதனின் உழைப்பையும் ஒன்று சேர்ப்பது. கல்லுக்கும் மண்ணிற்கும் உயிரூட்டும் செயல் தான் கட்டிடபணி. அது எளிதான விசயம் அல்ல” என்று கட்டிடக்கலை குறித்து பேசினார். அதோடு அவர் வாசித்த இலக்கியங்களை குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து, ஹலோ எஃப்எம் ஜெயராஜ் ‘பண்பாட்டின் ஆதாரம் குடும்பம்’ என்ற தலைப்பில் தனது சொற்பொழிவை வழங்கினார். விழாவின் தொடர்ச்சியாக அமிர்தம் தாய்ப்பால் தானம் குழுவின் நிறுவனர் ரூபா செல்வநாயகிக்கு சிபாக சிறந்த விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சிபாக உறுப்பினர்கள் மற்றும் கட்டிட கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.