விரைவில் பதவி விலகுவேன் – ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க்!

மிக விரைவில் நான் ட்விட்டர் சிஇஓவில் இருந்து பதவி விலகுவேன் என்று எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. தற்போது, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பதவியில் இருந்து விரைவில் விலகுவேன் என தெரிவித்துள்ளார்.

உலகின் சில முக்கியமான செய்தியாளர்களின் கணக்குகளை கடந்த வியாழக்கிழமை முடக்கினார் எலான் மஸ்க். அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அண்டோணியோ குட்டரஸ் வரை அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து அந்த நடவடிக்கையை கைவிட்டார் எலான் மஸ்க்.

Elon Musk

அதோடு, தான் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா எனக் கேட்டு பயனர்களை கருத்துக் கூறுமாறு கேட்டிருந்தார். மேலும் பயனர்களின் முடிவிற்கு தான் கட்டுப்படுவதாகவும் கூறியிருந்தார்.

எலான் மஸ்க் அதன்படி ட்விட்டர் பயனர்களும் தங்கள் கருத்துக்களை வாக்குகளாக அளித்துள்ளனர். உலகம் முழுவதும் 35 கோடி பயனர்களை ட்விட்டர் பயன்படுத்தும் நிலையில் எலான் மஸ்க்கின் கேள்விக்கு சுமார் ஒரு கோடியே 75 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

அதில் 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். 43 சதவீதம் பேர் வேண்டாம் என்று பதில் அளித்துள்ளனர்.

பயனர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதாக எலான் மஸ்க் ஏற்கனவே பதிவிட்டிருந்த நிலையில் . அதன்படி ட்வீட் செய்துள்ள எலான் மஸ்க், மிக விரைவில் நான் ட்விட்டர் சிஇஓவில் இருந்து பதவி விலகுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இன்னொரு ஆள் சிஇஓவாக கிடைத்தவுடன் நான் பதவி விலகுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் .