
கோவை மாவட்டத்தில் பிரபல திரையரங்கான சாந்தி திரையரங்கில் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. திரைப்படம் வெளியாகும் முன்பு , ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், குத்தாட்டம் போட்டும் கொண்டாடினர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கோவையை பொருத்தவரை பிரதான திரையரங்குகள் அனைத்திலும் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இதனிடையே இன்று காலை 7 மணி முதலே ரசிகர்கள் பல்வேறு திரையரங்கம் முன்பு குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் ஜமாப் இசைக்கு குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.