25,000ம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை!

காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக பல்வேறு இயற்கை பேரழிவுகளை அண்மைக் காலங்களாக நாம் சந்தித்து வருகிறோம். சென்னையைப் புரட்டிப் போட்ட மிக்ஜம் புயல் சிறந்த எடுத்துக்காட்டு. பருவ மழை இயல்பை விட அதிக அளவு பெய்திருக்கிறது. இதன் விளைவாக, 25,000ம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.

கடலூர், விருத்தாசலம், கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு ஒரு வாரம் மட்டுமே இருந்த சுமார் 25,000ம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்து இருக்கின்றனர்.