என்.ஜி.பி கல்லூரியில் ‘பிராண்ட் எக்ஸ்போ’!

என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை சார்பில் ‘பிராண்ட் எக்ஸ்போ’ அறிமுக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவினை கல்லூரியின் தாளாளர் டாக்டர் தவமணி பழனிசாமி தொடங்கி வைத்தார். கல்லூரியின் இணை  முதல்வர் சரவணன், என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் கல்விசார் இயக்குநர் முத்துசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மேலாண்மைத்துறையின் தலைவர் முனைவர் மோகன் விருந்தினர்களை வரவேற்று பேசினார்.

விழாவில் மேலாண்மைத்துறை மாணவர்கள் புதியதாக சந்தைப்படுத்தப்பட்ட பல்வேறு பொருள்களின் தன்மைகள் குறித்து விவரித்தனர். மேலும், பிற துறைகளை சார்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட 4000-க்கும் மேற்பட்டவர்கள் புதிய பொருட்களைப் பற்றி அறிந்து பயன் பெற்றனர்.