தி ஈவென்ட் மேனேஜர்ஸ் அசோசியேசன் சார்பில் “வெட்டிங் டுடே” கண்காட்சி

தி ஈவென்ட் மேனேஜர்ஸ் அசோசியேசன் சார்பில் கோவை கொடிசியா அரங்கில் துவங்கியது “வெட்டிங் டுடே கண்காட்சி”. திருமண வைபங்களுக்கான பிரத்யேக கண்காட்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவையில் கடந்த 7ஆண்டுகளாக தி ஈவன்ட்ஸ் மேனேஜர்ஸ் சங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருமண நிகழ்வுகளுக்கான பிரத்யேக கண்காட்சியாக 3- வது எடிசனாக வெட்டிங் டுடே எனும் பிரத்யேக கண்காட்சி கோவை கொடிசியா இ ஹாலில் நடைபெற்றது. செப்டம்பர் 30- ந் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இதற்கான துவக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களாக முக்கிய தொழிலதிபர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர். இதில் விசிஸி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரிக்ஸான், அரோமா நிர்வாக இயக்குனர் பொன்னுசாமி, விஸ்வநாதன் அனிருதன் கிராந்தி, விஜயகுமார், சத்யா, வினோத் கோபால்,பழனிசாமி,ராஜூ பல்ராம் பாபு, சஞ்சீவ் கபூர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

கண்காட்சியில், நகைகள், புத்தாடைகள், இசைக் கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், கேட்டரிங் நிறுவனங்கள், வெட்டிங் ப்ளேனர்ஸ், டெக்கரேட்டர்ஸ், திருமண நிகழ்விற்கு பயன்படும் ஹெலிகாப்டர், லக்சரி கார்கள் தரும் நிறுவனங்கள் ஆடல் & பாடல் கலைஞர்கள், பந்தல் அமைப்பாளர்கள் போன்ற திருமணத்திற்கு தேவையான அனைத்து விதமான அம்சங்களும் ஒரே கூரையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன..

இதில்,திருமண நிகழ்ச்சியை திட்டமிடுபவர்கள, அலங்காரம் செய்வோர், ஆடை வாடிவமைப்பாளர்கள், மலர் அலங்காரம் செய்வோர், திருமண அமைப்பாளர்கள் . போட்டோர்கிராபர்கள, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.