ஐஐஏ..,சென்டர் கட்டட வடிவமைப்பாளர்களின் கட்டுமான கண்காட்சி!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடெக்ஸ் கோயம்புத்தூர் சென்டர் சார்பில் பொது மக்களுக்கான இலவச கட்டுமான கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

உலகக் கட்டிடக்கலை தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடெக்ஸ் கோயம்புத்தூர் சென்டர் மற்றும் ரோட்டரி மின்ஸ் பிசினஸ் பெல்லோஷிப் சார்பில் இரண்டு நாள் காண்காட்சி நடைபெறுகிறது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜிடி அருங்காட்சி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடெக்ஸ் கோயம்புத்தூர் சென்டரின் உறுப்பினர்கள் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாங்கள் வடிவமைத்த கட்டுமானங்களை கோவை மக்களுக்காக காட்சிப்படுத்தினர். இதனை பார்வையிட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கட்டட வடிவமைப்பாளர்களிடம் விளக்கங்களை கேட்டறிந்தார்.

இது தொடர்பாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடெக்ஸ் கோயம்புத்தூர் சென்டரின் தலைவர் ஜெயக்குமார் நமது வலைதளபக்கத்திற்கு அளித்த நேர்காலனில்,”பெரிய அளவிலான கட்டுமானத்திற்கு மட்டுமே கட்டட வடிவமைப்பாளரை அணுக வேண்டும் என்பதில்லை. சிறிய அளவிலான கட்டுமானத்திற்கும், அதாவது ஆயிரம் சதுர அடி வீட்டு மனைக்கும் கட்டட வடிவமைப்பாளரை அணுகலாம். இதனை வலியுறுத்தும் வகையிலும், கோவை கட்டட வடிவமைப்பாளர்கள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த கண்காட்சி அமைந்திருக்கிறது. கட்டட வடிவமைப்பாளர்களை கொண்டு ஸ்மார்ட் சிட்டி போன்று ஸ்மார்ட் ஹோம் அமைக்க முடியும்” என்பதை வலியுறுத்தவே இந்த கண்காட்சி என்கிறார்.

மேலும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடெக்ஸ் கோயம்புத்தூர் சென்டரின் முன்னாள் தலைவர் அறிவுடை நம்பி பேசுகையில் “இது கட்டட வடிவமைப்பாளர்களின் திறமைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான கண்காட்சி. மேலும், ஐஐஏ கோயம்புத்தூர் சென்டர் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. உலக கட்டிடக்கலை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் சுமார் ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றவர்.,

இந்த போட்டியின் நோக்கம் மாணவர்கள் மத்தியில் சூழலுக்கு ஏற்ப கட்டுமானத்துறைகளின் நவீனத்துவங்களை கொண்டு சேர்ப்பதாகும்” எனக் கூறினார்.