தொழிற்சாலைகளின் வளர்ச்சி ‘சரிவு’

இந்தியாவில் தொழிற்சாலைகளின் வளர்ச்சி விகிதம் குறைந்து உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

வளரும் நாடுகள்; வளர்ந்த நாடுகள் என்று பிரிக்காமல் நாட்டின் ஓட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் தொழிற்சாலைகளின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்குத் தொழிற்சாலைகளில் உற்பத்தி விகிதம் சரியத் தொடங்கி இருக்கிறது. அதேபோலவே, புதிய ஆர்டர்கள் பெறுவதில் கடினமான சூழல் காணப்படுவதாகத் தர ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர்வதேச தேவைகள் குறைந்திருப்பதும், ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஏற்றுமதி குறைவு போன்ற காரணிகளால் தொழிற்சாலைகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.