நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் வரவேற்பு விழா

நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் நேரு குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்து பேசுகையில், ஸ்டார்ட்அப், வேலை வாய்ப்பு போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்த ஊக்குவித்தார். தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலர் கிருஷ்ண குமார் மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்தவும், தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தவும் ஊக்குவித்தார்.

என்ஐடியின் முதல்வர் சிவராஜா நிறுவனத்தின் சாதனைகளை பற்றி மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். துணை இயக்குநர் உதயசங்கர் மாணவர்களை வாழ்வில் முன்னேற ஊக்குவித்ததோடு ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நாஸ்காமில் இலவச பாடத்திட்டத்தை வழங்குவதாக உறுதியளித்தார்.

பட்டிமன்றம் சொற்பொழிவாளர் ஸ்ரீ.ஆர்.தனபால் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு, தனத மதிப்புமிக்க வார்த்தைகளால் மாணவர்களிடம் அருமையாகப் பேசினார். அதோடு மாணவர்களை நல்வழியில் வழிநடத்த வேண்டுமென்றும், ஊக்கப்படுத்த வேண்டுமென்றும் பெற்றோர்களிடம் தெரிவித்தார்.