என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பு பட்டிமன்றம்

என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் இன்றைய இளைய சமுதாயத்தின் போக்கு எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

என்.ஜி.பி கல்லூரியுடன், நேரு நகர் லயன்ஸ் கிளப் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு இணைந்து நடத்திய பட்டிமன்றத்திற்கு எழுத்தாளர் ஜெய. ராஜமூர்த்தி தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி, இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் பழனிசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இளைய சமுதாயத்தின் போக்கு பாராட்டத்தக்கதா? பரிதாபத்துக்குரியதா? எனும் தலைப்பில் பிரபல தொலைக்காட்சி பட்டிமன்றம் பேச்சாளர்களான சசிகுமார், பழனி, சசிகலா மற்றும் ஆதிரா ஆகியோர் பேசினர். இந்நிகழ்வில், பொதுநல அர்ப்பணிப்புடன் சமூகத்தில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களுக்கு, சிறந்த மக்கள் சேவை, சிறந்த தொழில் முனைவோர், உழைப்பால் உயர்ந்தவர், சிறந்த கல்வியாளர் உட்பட 14 பிரிவின் கீழ் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

இதில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தேசிய துணை தலைவர் செந்தில்குமார், நேரு நகர் லயன்ஸ் கிளப் தலைவர் மோகன்ராஜ், செயலாளர் பால்ராஜ், கிருஷ்ணமுர்த்தி, பொருளாளர் கணலி, மேலும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.