காவேரி மருத்துவமனையின் உறுப்புமாற்று சிகிச்சைக் குழுவிற்கு டிரான்ஸ்டான் விருது!

தமிழ்நாடு மாநில உறுப்புமாற்று சிகிச்சை ஆணையம் , சென்னையின் உயர்சிகிச்சை மருத்துவமனையான காவேரி மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை குழுவிற்கு(டிரான்ஸ்டான்)  விருதை வழங்கியுள்ளனர்.

உறுப்புமாற்று சிகிச்சை பெற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்றி அவர்களின் வாழ்க்கையில் மேம்பாட்டைச் சாத்தியமாக்கியிருக்கின்ற இதய மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை சேவையில் காவேரி மருத்துவமனையின் குழு கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு, நிபுணத்துவம் மற்றும் வியக்கத்தக்க வெற்றிக்கு இந்த அங்கீகாரம் நேர்த்தியான சாட்சியமாகத் திகழ்கிறது.

கடந்த பல ஆண்டுகளில், உறுப்புமாற்று சிகிச்சை செயல்முறைகளில் மிகச்சிறப்பான விளைவுகளை தொடர்ந்து நிலையாக நோயாளிகளுக்குப் பெற்றுத் தந்திருப்பதில் குழு வெற்றி பெற்று அவர்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றத்தை சாத்தியமாக்கியிருக்கிறது; அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, இயல்பான வாழ்க்கை வாழ வழிவகுத்திருக்கிறது.  சாத்தியமுள்ள மிகச்சிறந்த சிகிச்சை விளைவுகளை வழங்குவதில் இக்குழுவினர் கொண்டிருக்கும் பொறுப்புறுதியே, இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை தேவைப்படும் நிலையிலுள்ள எண்ணற்ற நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கின்றது.

உறுப்புமாற்று சிகிச்சை என்பது, ஒரு நீண்ட பயணம்; இதன் ஒவ்வொரு நிலையிலும், அம்சத்திலும் இவர்களது ஒத்துழைப்பு மிக்க அணுகுமுறை, மிகத்துல்லியமாகத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது.  நோயாளிகளின் உடல்நிலை பாதிப்பை மதிப்பிடும் தொடக்க செயல்பாட்டிலிருந்து, உறுப்புமாற்று சிகிச்சைக்குப் பிறகு பின்தொடர் பராமரிப்பு வரை இக்குழுவினரின் செயல்பாடும், சேவையும் நிகரற்றதாக உலகத்தரத்தில் இங்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சென்னை காவேரி மருத்துவமனையின், மருத்துவ இயக்குநர் ஐயப்பன் பொன்னுசாமி பேசுகையில், “டிரான்ஸ்டான் அமைப்பிடமிருந்து கிடைத்திருக்கும் இவ்விருதும், அங்கீகாரமும் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய கௌரவமாகும்.  இதய மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையில் மேன்மையான விளைவுகளை உறுதி செய்வதில் எங்கள் குழுவினர் கொண்டிருக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும், நிபுணத்துவத்தையும் இவ்விருது சுட்டிக்காட்டுகிறது.  உறுப்புமாற்று செயல்முறை வழியாக, உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளின் உயிரை காப்பதில் எங்கள் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஆழமான அக்கறையும், உறுதியும் கொண்டிருக்கின்றனர்.  எங்களது செயல்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதாக விளங்கும் இவ்விருது,  சிகிச்சை தரநிலைகளை  மேம்படுத்துவதற்கு எங்களுக்கு உத்வேகமளிக்கிறது.” என்று கூறினார்.