இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கம்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் ஸ்பைடர்-2024 எனும் தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம்  நடைபெற்றது .

சிறப்பு விருந்தினராக சைபர் பாதுகாப்பு வல்லுநர் மற்றும் கட்டிட வடிவமைப்பாளர் விஜய் நாகராஜ்  கலந்து கொண்டார். அவர் தனது உரையில் இணையப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தைத் தவறாகக் கையாளுவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, ஸ்பைடர் டெக்னிக்கல் எனும் சிறப்பு நாளிதழை வெளியிட்டார்.

இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் டி.ஆர்.கே. சரசுவதி கண்ணையன் மற்றும் கல்லூரி செயலர் பிரியா ஆகியோர் நிகழ்வில் திறம்படப் பங்கேற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களை வழங்கி  ஊக்கப்படுத்தினர்.

இதில் 17 கல்லூரிகளிலிருந்து 352 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.