நேரு சர்வதேச பள்ளியில் “தராங் – 2024” ஆண்டு விழா

நேரு சர்வதேச பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழா தராங் – 2024 எனும் தலைப்பில் பி.கே.தாஸ் கலையரங்கில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக முன்னாள் நீதியரசர் முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு மாணவர்களின் எதிர்காலத்திற்கு வலுவூட்டும் அரிய கருத்துகளை எளிய முறையில் எடுத்துரைத்துச் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ எனும் பெற்றோருக்கான பயிற்சிப் பட்டறையில் குழந்தை வளர்ப்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்துப் பயனுள்ள வகையில் விளக்கினார்.

விழாவில் நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக தலைவரும் வழக்கறிஞருமான கிருஷ்ணதாஸ், முதன்மை நிர்வாக அதிகாரி கிருஷ்ண குமார், நேரு கிட்ஸ் அகாடமி மற்றும் நேரு சர்வதேச பள்ளியின் தாளாளர் சைதன்யா கிருஷ்ண குமார், நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் நாகராஜா ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். பள்ளி முதல்வர் சிவபிரகாஷ் பள்ளியின் பல்வேறு நிகழ்வுகளை ஆண்டு அறிக்கையாகச் சமர்ப்பித்தார்.

இக்கல்வியாண்டில் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குச்  சிறப்பு விருந்தினர்கள் விருதுகளை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் தங்கள் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாகக் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.  விழாவில் கலந்து கொண்ட பல்வேறு நேரு கல்வி குழுமங்களின் கல்லூரி முதல்வர்கள், பெற்றோர்கள் என அனைவரும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மனதை மயக்கும் விதம் இருந்ததாகப் பாராட்டினர்.