நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் 5 முக்கிய உணவுகள்!

மழைக்காலம் தொடங்கிவிட்டன…பருவமழை பெய்து வரும் நேரத்தில் அவ்வப்போது குளிரும் அதிகமாகி வருகிறது. இச்சமயத்தில் தான் நோய் தொற்றின் பாதிப்புகள் அதிவேகமாகப் பரவி நம் உடலை பாதிக்கிறது. அதன் வகையில், குளிர் காலத்திற்கேற்ப நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சில உணவுகள் குறித்து இங்கே காணலாம்…

சத்தான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, சரியான தூக்கம், புகைபிடிப்பதை நிறுத்துதல், ஆரோக்கியமான உடலைப் பராமரிப்பது மற்றும் மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவது ஆகியவை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் சில வழிகள் ஆகும். குளிர் காலத்திற்கேற்ப வெதுவெதுப்பான உணவுகளை சரியான முறையில் எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நோய் தாக்குதலிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

வைட்டமின் சி 

10 Vitamin C Foods You Must Include In Your Diet · HealthKart

பருவகால பழங்களை சாப்பிடுவதன் மூலம் போதிய வைட்டமின் சி- யை பெறலாம். இந்த பருவத்தில் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, நெல்லிக்காய் மற்றும் திராட்சை உள்ளிட்ட பழங்களை உட்கொள்ள வேண்டும். இது  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நம்மை பலப்படுத்த உதவுகிறது.

இது மட்டுமல்லாமல்  ஸ்ட்ராபெரி, ப்ரோக்கோலி, கிவி, காலே, லிச்சி, பார்ஸ்லி போன்றவற்றிலும் வைட்டமின் சி  நிறைந்துள்ளது.

பாதாம்:

Badam Khane Ke Fayde | Almonds For Diabetes: वैज्ञानिकों की सलाह- खाने से  पहले खा लेना बस इतने बादाम, Blood Sugar होगा कम | indian doctors claim in  new study having 20

உலர்ந்த பழங்களில் நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற பல தாதுக்களும் நிறைந்துள்ளன.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாதாம், வால்நட், பிஸ்தா, வேர்க்கடலை போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

கீரை: 

6 Health Benefits of Spinach

சத்தான கீரைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

உள்ளன. அவை வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது.

இஞ்சி:

Ginger Root: How to Buy, Store, and Cook With Ginger | Epicurious

இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலில் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

கேரட்  :

Carrot – KDD & Co

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நம் உடலை வலிமைப்படுத்த உதவுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கும் தசைகளுக்கும் சிறந்த ஊட்டச்சத்தை வழங்குகிறது.