பொது சுகாதாரம் மேம்பட அதிக நிதி ஒதுக்க வேண்டும்                                   

இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள மருத்துவ சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் அசோகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவர் டாக்டர் அபுல் காசன் முன்னிலையில் மருத்துவ சங்கத்தின் நிர்வாகிகள் டாக்டர் ஜெயலால், டாக்டர் ரவிக்குமார், டாக்டர் துரைக்கண்ணன், டாக்டர் கார்த்திக் ராஜா, டாக்டர் பரமேஸ்வரன், டாக்டர் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அகில இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் அசோகன் செய்தியாளரிடம் பேசுகையில்,

இந்திய மருத்துவ சங்கம் 1928 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு 1800 கிளைகளோடு 28 மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 28ஆம் தேதி அனைவரும் ஒன்று கூடி கலந்தாய்வு செய்து வருகிறோம்.  இந்த ஆண்டு கலந்தாய்வில் முக்கிய முடிவாக மருத்துவக் கொள்கை அறிக்கை ஒன்றை தயார் செய்து, அதனை ஜனவரி 12 தேதி வெளியிட உள்ளோம். அதில் 10 முக்கிய அம்சங்களை நிறைவேற்றக்கோரி அனைத்து கட்சி தலைவர்களிடமும் கொடுக்க உள்ளோம்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை முக்கிய கருவாகக் கொண்டிருக்கும் இந்த மருத்துவக் கொள்கை, பொது மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் பயன்பெறக்கூடிய வகையில் இருக்கும்.

முக்கிய அம்சமாகப் பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் அதிக நிதியை மருத்துவ துறைக்கு ஒதுக்க வேண்டும் பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் தற்போது மத்திய மாநில அரசுகள் 1.1 என்ற செலவினத்தைக் கணக்கிட்டு நிதி ஒதுக்கிறது அவற்றை ரெண்டு புள்ளி அஞ்சு சதவீதமாக உயர்த்த வேண்டும். தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையில் மருத்துவத்திற்கு நான்கு சதவீதம் செலவினங்கள் ஏற்படுகிறது இவற்றைக் கட்டுப்படுத்த, பட்ஜெட்டில் ஆரோக்கியத்திற்கு முக்கியம் அளிக்கக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

மருத்துவர்களுக்கு இந்தியச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கும் வகையில் கிரிமினல் போன்ற வழக்கு பதிவுகளால் மருத்துவத்துறையினர் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் இவற்றை மாற்ற வேண்டும். மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் மருத்துவ காப்பீட்டில் உள்ள குறைபாடுகளை போக்குவதற்கு அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி சீரமைக்கப்படும்.

குழந்தை பேறு மருத்துவமனைகள் பெர்டிலிட்டி சென்டர் அதிக அளவு கட்டணம், பொதுமக்களிடம் வாங்கும் பணத்திற்கு ரசீது இல்லை என்ற புகார்கள் இருப்பின் அவற்றை பொதுமக்கள் தெரிவித்தால் இந்திய மருத்துவ சங்கம் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.