35 ஆண்டுகள் கழித்து கமல், மணிரத்னம் காம்போ

‘நாயகன்’ படத்திற்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான ப்ரோமோ வீடியோ நவம்பர் 7 யில் வெளியாக உள்ளது.

நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்து  பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். கமல் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு  ட்ரீட் கொடுக்கும் விதமாக ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிமுகத் தோற்றம் வெளியாகிறது.

அதேபோல மணிரத்னம் இயக்க உள்ள படத்தின் ப்ரோமோ  வீடியோ வெளியாகிறது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இது தொடர்பான அப்டேட்டை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.