கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் புற்றுநோய்க்கென பிரத்தியேக சிகிச்சை மையம் துவக்கம்

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் உலகத்தரமான அதிநவீன புற்றுநோய் மருத்துவ மையம் 2011-ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கே.எம்.சி.ஹெச். மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய்க்கென பிரத்தியேக நோய்த்தடுப்பு சிகிச்சை மையம் சனிக்கிழமை துவங்கப்பட்டது.

புற்றுநோயுடன் போராடி குணமடைந்தவர்கள், நோயிலிருந்து மீண்டுவர அவர்களுக்கு உதவிகரமாக செயல்பட்டவர்கள், நோயுடன் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு நம்பிக்கையை வலுவாக்கும் வகையில் ஆண்டு தோறும் ‘ரோஸ் தினம்’ கொண்டாடப்படுகிறது.

 இதனை முன்னிட்டு, ‘புதிய பாதை, புதிய நம்பிக்கை’ என்ற கருத்தாக்கத்துடன் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமைத் தாங்கினார். தன்னம்பிக்கை பேச்சாளர் முனைவர் பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தன்னம்பிக்கை உரையாற்றினார்.