2000 ஆண்டுகளின் தவமே…. கிருஷ்ணரின் உதயம்!

தங்கை தேவகிக்கும் – வாசுதேவருக்கு மணமுடித்து வைத்து அவர்களை தன் தேரிலே அரண்மனை நோக்கி அழைத்து சென்றான் தேவகி அண்ணன் கம்சன். அப்போது வானத்தில் ஒலித்த அசுரேந்தி கம்சனிடம்.. தேவகி வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உன் உயிருக்கு ஆபத்து என்று சொல்லியது.
அதை கேட்ட கம்சன் அன்பாக பார்த்த தன் தங்கையை வெறுப்பாக நோக்கி பார்த்தான்.

தன தங்கையை கொன்று விடலாம் என்று நினைத்த கம்சனை தேவகியின் கணவர் வாசுதேவர் தடுத்தார். தங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் உன்னிடமே கொடுத்து விடுகிறோம் என்று வாசுதேவர் கம்சனிடம் சொல்லி தன் மனைவியை காப்பாற்றினார்.

மனசமாதானம் அடைந்த கம்சன் அதை ஏற்று கொண்டார் . இருப்பினனும் தன் தங்கையும் அவரது கணவரையும் சிறையில் அடைத்து தன் கண்காணிப்பிலே வைத்து கொண்டார் கம்சன்.

அவர்களுக்கு பிறந்த ஒவ்வரு குழந்தையையும் தரையில் வீசி கொன்றார் கம்சன். அவரது கணக்கு படி ஏழு குழந்தைகள் பிறந்து அவர்களின் வாழ்வு முடிந்தது. எட்டாவது குழந்தைக்காக காத்திருந்தார் கம்சன் அப்போது ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டம தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு தேவகி வயிற்றில் பிறந்தார் மாய கிருஷ்ணர். தங்களுக்கு பிறந்த குழந்தையை ரசிப்பதை மறந்து தரிசித்து கொண்டிருந்தனர்.

கணநேரத்தில் குழந்தை மகாவிஷ்ணுவாக உருவம் எடுத்து அவர்கள் முன்பு கூறியதாவது : இதற்கு முன்பு நீங்கள் இருவரும் தம்பதியாக இருந்த போது 2000 ஆண்டுகள் என்னை நோக்கி தவம் செய்தீர்கள் . அந்த தவத்தை வைத்து உங்களுக்கு நான் காட்சி அளிக்கும் போது என்னையே உங்கள் மகனாக வேண்டும் என்று வரம் கேட்டீர்கள். அதற்காக இப்போது கண்ணன் என்ற திருநாமத்தில் மீண்டும் பிறந்துள்ளேன்.

இதன் பின்னர் உங்களுக்கு பிறவி இல்லை உங்களையும் மக்களையும் கம்சனிடம் இருந்து விடுவிக்கிற கடமை எனக்கு உள்ளது. அதன் பின்னர் நீங்கள் வைகுண்டம் அடைவீர்கள் என்று சொல்லியபடியும் என்னையும் கோகுலத்தில் உள்ள நந்த குடும்பத்தின் யசோதரிடம் சேர்த்து விடுங்கள்.

அதற்கு பதிலாக அவருக்கு பிறந்த பெண் குழந்தையை இங்கேயே கொண்டு வாருங்கள். அதன் பின்னர் எல்லாம் சுபமாகவே நாடாகும் என்று சொல்லியபடி மஹாவிஷ்ணுபகவான் மறைந்தார் .

அதன் பின்னர் வாசுதேவருக்கு செய்த எந்தச் செயலும் நினைவில் இல்லாத படி மனம் மாற்றப்பட்டது. வசுதேவர் சிறையில் இருந்து புறப்பட்டபோது, மாயக்கண்ணன் லீலைகளால் காவலர்கள் அனைவரும் மயக்கமுற்றனர். யமுனை ஆறு இரண்டாக பிளந்து வழிவிட்டது போன்ற அதிசயங்கள் நிகழ்ந்தது.

கர்ப்பம் தரிக்காமலேயே கண்ணனுக்கு பாலூட்டி சீராட்டி வளர்க்கும் பாக்கியம் பெற்றவள் அல்லவா யசோதை? பாலகிருஷ்ண லீலைகளை அணுஅணுவாக அனுபவித்தவள் யசோதை. அகில உலகையும் கட்டியாளும் அந்த பரமாத்மாவை உரலில் கட்டிப்போட்ட உத்தமி அவள். யசோதைக்கு கிடைத்த பாக்கியம், கர்ப்பவாசம் தரித்து கிருஷ்ணனை பெற்று எடுத்த தாய் தேவகிக்கும் கிடைக்கவில்லை. அங்கு வளர்ந்த மாயக்கண்ணனை கொலை செய்வதற்காக கம்சன் முடிவு செய்தான்.

கோகுலத்தில் இருந்த கிருஷ்ணரை அழிக்க பலமுறை முயன்றும், அவனது முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் சிறுவனாக இருந்த கிருஷ்ணரை தன்னுடைய இருப்பிடத்திற்கே அழைத்து, கொல்வது என்று கம்சன் முடிவு செய்தான்.

கிருஷ்ணரை, மல்யுத்தம் செய்ய அழைத்தான். அவரோ சிறுவன். அவருடன் மல்யுத்தம் செய்ய வந்தவர்களோ வயதிலும், அனுபவத்திலும் உயர்ந்தவர்கள். ஆனாலும் அவர்களை எல்லாம் மல்யுத்தத்தில் வென்றான் கண்ணன், இறுதியாக கம்சனுடன் யுத்தம் செய்து வதம் செய்தார்.

அனைவரும் கண்ணன் அவதரித்தது கம்சனை அழிப்பதற்காக என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர் அவதரித்தது, அதர்மத்தை அழிப்பதற்காகத்தான். கம்சனை அழிப்பது தான் நோக்கம் என்றால், அவனைக் கொன்றதுமே கிருஷ்ணரின் அவதாரம் நிறைவு பெற்றிருக்கும். ஆனால் உலகம் முழுவதும் பரவியிருந்த அதர்மத்தை அழிப்பதற்காக தோன்றிய அவர் என்பதால் தான், குருச்சேத்திர யுத்தம் முடியும் வரை அவர் அவதாரம் நீண்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அஷ்டமி தினமும் ரோகினி நட்சத்திரிமும் இணைந்த நாளில் நள்ளிரவு 12 மணிக்கு சிறையில் பிறந்த தினத்தை நாம் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடி வருகிறோம்…

 

– கோமதிதேவி