SIIMS கல்லூரியின் 2ஆம் நாள் தீக்ஷாம்பரம் நிகழ்ச்சி

பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லூரியில் (SIIMS ) முனைவர் பிரகலாத் அரங்கில் தீக்ஷாம்பரம் நிகழ்ச்சியில் தொழில் முனைவோருக்கான நெறிமுறைகள் என்ற தலைப்பில் சிறப்புரை வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது

இந்நிகழ்வில் கல்லுரியின் இயக்குனர் எஸ்.பாலுசாமி வரவேற்புரை வழங்கும்போது மாணவர்கள் தொழில்முனைவர்களாக மாறவேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த முறையில் சேவை செய்ய வேண்டும். அதற்க்கு இது போன்ற தொழில் முனைவோரின் ஆலோசனைள் வேண்டும். அதை நல்ல முறையில் பின்பற்றி வளர வேண்டுமென பேசினார்.

சிறப்பு விருந்தினராக கோவை அசோசியேஷன் ஆப் அலையன்ஸஸ் க்ளப் இன்டர்நேஷனல் பிரதிநிதி சீனிவாசகிரி கலந்து கொண்டார். தொழில் முனைவோருக்கான நெறிமுறைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய சீனிவாசகிரி சிறந்த தொழில் முனைவோருக்கு தன் சுய நெறிமுறைகள், சமூக நெறிமுறைகள், தொழில் நெறிமுறைகளை முதலில் பின்பற்ற வேண்டும். வணிகத்தில் ஈடுபடும்போது அதற்கான தார்மீக கொள்கைகள் மதிப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த தொழில் முனைவோராக மாற முடியும் என்று கூறினார்.

பேராசிரியர் சர்மிளா, பேராசிரியர் கவிதா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் தியாகு நன்றியுரை ஆற்றினார்.இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.