புரோஜோன் மாலில் மெகா கோலப்போட்டி

கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலில் ஓணம் பண்டிகையையொட்டி சனிக்கிழமையன்று மெகா கோலப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 20 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா அடுத்த நாளான ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இவ்விழாவில் சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் செல்வி மற்றும் ரேடியோ சிட்டி எப் எம்மைச் சார்ந்த R J சியான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை புரோஜோன் மால் நிர்வாகத்தினரும் மற்றும் ரேடியோ சிட்டி எப் எம் , அப்டவுன் கான்ஃபெட்டி செய்திருந்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 50,000 மதிப்புள்ள பரிசுகளை அவெந்த்ரா பை ட்ரென்ட்ஸ், பொன்மணி வெட் கிரைண்டர்ஸ், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, ஐ எப் பி எலக்ட்ரானிக்ஸ் ஆகியோர் வழங்கினர்.