ஜி.ஆர். தாமோதரன் கல்லூரியில் “பயோ போக்கஸ்” கண்காட்சி

கோவை அவிநாசி அமைந்துள்ள டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரியில் டி.என்.எஸ்.சி.எஸ்.டி மற்றும் கல்லூரி உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் “பயோ போக்கஸ்” எனும் பெயரில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் 20க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

சுமார் 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் இந்த கண்காட்சியினை கண்டு களித்தனர். இந்த நிகழ்வில் இன்றைய உயர் தொழில்நுட்பவியலில் கலந்து வரும் நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளின் பயன்பாடுகள் குறித்தும், இத்துறையில் வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டது. விவசாயம், மருத்துவம், ஜவுளித்துறை, உணவுத்துறைகளில் உயிர் வேதியியலுக்கான வேலைவாய்ப்புகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உயர் தொழில்நுட்பவியல் துறை தலைவர் சுமதி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாணவர்களை,
நிர்வாக அறங்காவலர் பத்மநாபன், இணை நிர்வாக அறங்காவலர் கீதா பத்மநாபன், ஜிஆர்டிசிஎஸ் முதல்வர் சாந்தா, ஜிஆர்டிசிஎஸ் துணை முதல்வர் கே.கே. ராமச்சந்திரன் ஆகியோர் பாராட்டி ஊக்கப்படுத்தினர்