FOMBI போட்டியில் கே.பி.ஆர் கல்லூரி வெற்றி

இந்தியன் சொசைட்டி ஆஃப் நியூ எரா இன்ஜினியர்ஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ்” சமீபத்தில் மத்திய பிரதேசத்தின் போபாலில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான “ஃபார்முலா ஆஃப்-ரோடு மினி பஜா இந்தியா” (FOMBI) போட்டி போபாலில் நடத்தியது.

தேசிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நான்காம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் மாணவர்கள் பங்கேற்று, ‘சிறந்த வேக அதிகரிப்பு ‘ மற்றும் ‘சிறந்த இழுசக்தி ‘ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வெற்றி பெற்றதன் மூலம் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் இராமசாமி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். இதேபோல் இந்த போட்டியில் சென்ற ஆண்டிலும் இக்கல்லூரியின் மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.