ரோட்டரி கோயம்புத்தூர் இன்ஃரா புதிய க்ளப் துவக்கம்

ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டி முன்னிலையில், ரோட்டரி 3201 மாவட்ட கவர்னர் ராஜ்மோகன் நாயர் தலைமையில்,  ‘ரோட்டரி கோயம்புத்தூர் இன்ஃரா’ என்ற புதிய க்ளப் அண்மையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய க்ளப்-கு பட்டயத் தலைவராக காமராஜ், பட்டய செயலாளராக நவாசுதீன் மற்றும் 32 உறுப்பினர்களும் ரோட்டரி இன்டெர்னஷ்னல் உடன் இணைந்து கொண்டனர். இந்த அமைப்பு 32 கண்ஸ்ட்ரக்ஸன் தொழில் துறையினர் இணைந்து தொடங்கியதாகும். இவ்விழாவிற்கு ரோட்டரியன்ஸ் மயில்சாமி, தியாகராஜன், செந்தில்குமார் போன்றோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் ஒரு பகுதியாக “எளிய மக்களின் கனவு இல்லத்துக்கான கை ஏடு” என்ற புத்தகம் வழங்கப்பட்டது. மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 900 மாணவிகள் பயன்பெறும் வகையில் சுமார் 40,000.00 மதிப்புள்ள நாப்கின் டிஸ்பென்ஸரும் (Napkin dispenser), எரியூட்டியும் வழங்கப்பட்டது.