இந்துஸ்தான் கல்லூரியில் கருத்தரங்கம்

“பொறியியலாளராக வெற்றி பெறுவது எப்படி?”

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரிகளில் “பொறியியல் மாணவர்களுக்கு வருங்கால தொழில் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது

சிறப்பு விருந்தினராக கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கலந்துகொண்டு பேசியதாவது:  பொறியியலில் பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளை எடுத்துரைத்து, மாணவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன்களை மேம்படுத்துவதன் மூலம் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். உலகம் எவ்வாறு வேகமாக நகர்கிறது மற்றும் வெற்றிகரமான பொறியியலாளராக எப்படி வெற்றி பெறுவது என்பதை அறிய புதுமைகள் மற்றும் சந்தை உத்திகளின் பல உதாரணங்களை எடுத்துரைத்தார்.

பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஜெயா பேசுகையில்: மாணவர்கள் தங்கள் பட்டப் படிப்பின் தொடக்கத்திலேயே இலக்கை நிர்ணயித்து, அதை அடைவதற்குத் தங்கள் அறிவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுனர். இந்துஸ்தான் பொறியியல் கல்லூரிகள் எப்போதும் மாணவர்களுக்கு அவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் எதிர்கால வாழ்க்கை வளமாக அமைய அவர்களின் யோசனைகளைப் பயிற்சி செய்யவும் சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது என்று குறிப்பிட்டார்.

இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், செயலாளர் பிரியா சதிஷ்பிரபு, தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், இந்துஸ்தான் பொறியியல்  மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஜெயா, இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி முதல்வர் நடராஜன், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், இருக்கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.