இந்துஸ்தான் கல்லூரியில் உடல் மற்றும் மனநல விழிப்புணர்வு கருத்தரங்கம்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு “உடல் மற்றும் மனநல விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஜெயா பேசுகையில்: நல்ல உடல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தைப் பேணுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார் மேலும் இந்த போட்டி நிறைந்த உலகில் சாதிக்க சுறுசுறுப்பாக இருக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முறைப்படுத்துமாறு மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

அரசு இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் பேராசிரியர் ரவிக்குமார் மற்றும் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் தமிழ்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நவீன உணவு கலாச்சாரத்தில் ஆரோக்கியத்தின் தாக்கம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் இளைஞர்களின் பயனுள்ள வாழ்க்கை முறை ஆகியவற்றை விளக்கினர். ஆனந்தமாக இருக்க யோகா, தியானம், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், செயலாளர் பிரியா சதிஷ்பிரபு, கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.