ஆர்.வி கல்லூரியில் ஜியோ மார்ட் விற்பனைப் பயிற்சி பயிலரங்கம்

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் உள்தர மதிப்பீட்டு அமைப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் அமைப்பின் சார்பில் ஜியோ மார்ட் விற்பனைப் பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்றார். கணினி அறிவியல் துறைத்தலைவர் சண்முகப்பிரியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

மேட்டுப்பாளையம், ஜியோ மையத்தின் மேலாளர் ரமேஷ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசிய உரையில், ஜியோ வாடிக்கையாளர்களுக்கான திட்டங்கள், ஜியோ ஃபைபர் சேவைகள், வேகமாக இயங்கும் 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றைகளின் செயல்பாடுகள், ஜியோ மார்ட் நிறுவனத்தில் உள்ள வேலை வாய்ப்புகள், வேலைவாய்ப்பை பெறுவதற்கான முழுநேர பயிற்சி வகுப்புகள் மற்றும் பகுதி நேர பயிற்சி வகுப்புகள், பயிற்சி பெறும்போதே கிடைக்கின்ற வேலை வாய்ப்புகள், பயிற்சி முடிந்த பிறகு வழங்கும் சான்றிதழ்கள், நுகர்வோர்களிடமிருந்து பெறவேண்டிய தகவல்கள், ஜியோவின் சலுகை விலைகள் மற்றும் அதன் கூடுதல் வசதிகள் குறித்து பல கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.