கே.பி.ஆர் கல்லூரியில் ஏற்றுமதி இறக்குமதி குறித்த பயிலரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரிவு கல்லூரி மாணவர்களுக்காக “ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள்” குறித்த இரண்டு நாள் பயிலரங்கை நடத்தியது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார். ஆலோசகர் மற்றும் செயலர் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். வணிகவியல் துறைப் புல முதன்மையர் குமுதாதேவி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கோவை Horizon Institute of Foreign Trade & Agro Carbons உரிமையாளர் மூசா கலீமுல்லா கலந்து கொண்டு பேசுகையில்: நாட்டில் நிலவும் ஏற்றுமதி, இறக்குமதி ஆவணமாக்கல் நடைமுறைகளின் அடிப்படைக் கூறுகளை விளக்கினார். ஏற்றுமதி ஊக்குவிப்புக் கவுன்சிலின் பங்கு, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் IEC ஐ பதிவு செய்யும் செயல்முறை ஆகியவற்றை விளக்கிக் கூறினார்.

தளவாடங்கள், சுங்கச் சாவடி முகவர்களின் பங்கு, வாங்குபவர்களை அடையாளம் காண்பது மற்றும் சந்தைப்படுத்தும் உத்திகள் பற்றி தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் IEDC பிரிவின் 60 மாணவ உறுப்பினர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.