இந்துஸ்தான் கல்லூரியில் கருத்தரங்கம்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, இரசாயன பொறியியல் துறை மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் அமைப்புடன் இணைந்து தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் (Chemersatz 2022) நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக வுட் இந்திய பொறியியல் பிரைவேட் லிமிடெட் சென்னை, செயல்முறை பொறியாளர், அஸ்வின்நிர்மல், கலந்து கொண்டு “இரசாயன பொறியியல் மற்றும் அத்துறையின் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி குறித்து சிறப்புரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் ஜெயா வரவேற்புரை வழங்கினார். மேலும் இரசாயன பொறியியல் துறை மற்றும் அதன் சிறப்பை பற்றி விவரித்தார்.

பல்வேறு கல்லூரிகளில் இருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள், பேப்பர் ப்ரெசென்டேஷன், போஸ்டர் ப்ரெசென்டேஷன், புகைப்படம் எடுத்தல், ஐடியா பிச்சிங், தொழில்நுட்ப வினாடிவினா, கெம். விவாதம், தொழில்நுட்ப இணைப்புகள் போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கபரிசு வழங்கப்பட்டு கௌரிவிக்கப்பட்டனர்.

இந்த கருத்தரங்கில் பங்கு பெற்று வெற்றி வாகை சூடிய அனைத்து மாணவ மாணவியருக்கும் இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ்பிரபு வாழ்த்து தெரிவித்தனர். இதில் டீன் மகுடேஸ்வரன், கல்லூரியின் தலைமை நிர்வாக அலுவலர் கருணாகரன், அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.