கீரைகளின் மகத்துவம்

நம் அன்றாட உணவில் கீரையை தினமும் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு அதிகப்படியான இரும்புச் சத்துக்ககளும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை குறித்து காட்டிலும் கீரையை அதிகம் உட்கொண்டு வந்தால் பல பிரச்சனைகளும் நிறைந்திருக்கும்

நன்மைகள்:

நல்ல ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்து கீரை. அதில் பொட்டாசியம் போதுமான அளவிலும் மற்றும் சோடியம் குறைவாக உள்ளதால் இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்

கீரையில் மிகக் குறைந்த கலோரிகள் கொண்டு உள்ளதால் இரத்த சோகை போன்ற நோய்கள் வராமல் காக்கும்.

கீரையில் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் இருப்பதால், சருமத்தில் இறுக்கத்தை ஏற்படுத்தி சுருக்கங்களைத் தவிர்த்துவிடும்.பெண்கள் முகத்தில் இயற்கையான அழகையும் பளபளப்பினையும் அதிகரிக்க விரும்பினால், அவர்கள் தொடர்ந்து கீரை சாற்றை உட்கொள்ளுதல் வேண்டும்.

குளிர்காலத்தில் கீரையை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரம் என்று சொல்லலாம்.

தீமைகள்:

பசலை கீரையில் ஆக்சலேட் அதிகம் இருப்பதால் இது பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு சிறுநீரகத்தில் கற்கள் உருவாக தொடங்கும்.

கீரையை வேக வைத்து சாப்பிட்டால் அதிலுள்ள ஆக்சலேட்டின் அளவு குறைந்து போய்விடும். அது மட்டுமல்லாமல் கீரையை தயிர் அல்லது சீஸ் கலவையுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும்.

கீரையில் பியூரின் என்ற ரசாயன கலவை அதிகம் உள்ளதால் இதை அதிகமாக உட்கொள்வது கீல்வாத பிரச்சினைகளை ஏற்படுத்தும்

கீரை என்பது நார்சத்து உள்ள உணவு. அதை அதிகம் சேர்த்து வந்தால் வயிற்று உப்புசம், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ரத்த சோகை மற்றும் ரத்த அழுத்த மருந்துகளை எடுத்து கொள்பவர்கள் கீரையை தவிர்ப்பது நல்லது.

 

 

-கோமதிதேவி. பா