ஒட்டகச்சிவிங்கி பற்றி அதிசிய தகவல்கள்

ஒட்டகச்சிவிங்கிதான் உலகின் உயரமான உயிரினமாகும்! ஆண் ஒட்டகச்சிவிங்கி 18 அடி உயரம் வரை வளரும் அதாவது 5.5 மீட்டர்!

ஒட்டகச்சிவிங்கி கூட்டமாக நின்றால் அதை ஆங்கிலத்தில் ‘Tower’ (டவர்) என்று அழைப்பார்கள்!

ஒட்டகச்சிவிங்கியால் கொட்டாவி விட முடியாது. நீந்துவதும் இல்லை.

ஒரு ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தின் சராசரி உயரமே ஆறு அடிகள்!  1.8 மீட்டர். அது நாக்கு அதிகபட்சமாக 53 செண்டிமீட்டர்கள் வரை வளருமாம்!

மனிதர்களின் கை ரேகை எப்படி ஒவ்வொருவருக்கும் தனி தனியாக இருக்குமோ, அதுபோல் ஒட்டகச்சிவிங்கியின் உடலில் உள்ள கோடுகளும் ஒவ்வொரு சிவிங்கிக்கும் மாறுபடும். ஒன்றின் போல் இன்னொன்றிற்கு இருக்காது!

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தை விட, முன்னங்கால்கள் நீளமானவையாம். தரையில் உள்ள புற்களை சாப்பிட முன்னங்கால்களை அகல விரித்து, உடலை பதித்து கொள்ளுமாம்!

சராசரி மனிதர்கள் ஒட்டகச்சிவிங்கியின் கால் மட்டத்திற்கு தான் இருப்பார்களாம். ஏனென்றால், ஒட்டச்சிவிங்கியின் காலின் நீளம் ஆறடிக்கும் மேல் இருக்கும்.

ஒட்டகச்சிவிங்கிகளில் 50 விழுக்காடு, தங்கள் குட்டிகளை பாதுகாக்க தவறுகின்றனவாம். அவைகள் கருஞ்சிறுத்தைகளிடம் சிக்கி அழிகிறது.

 

 

– கோமதிதேவி. பா