உழவன் செயலி பயன்படுத்தலாம் வாங்க!

அமிர்தா வேளாண்மை கல்லூரியின் “ ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின்” கீழ் மயிலேறிபாளையம் ஊராட்சியை சேர்ந்த இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் உள்ளூர் விவசாயிகளுக்கு தமிழக அரசால் உருவாக்கப்பட்ட உழவன் செயலியை பயன்படுத்த பரிந்துரைத்தனர்.

இந்த செயலியின் மூலம் கிடைக்கும் பயன்கள் மற்றும் இதில் வழங்கப்படும் சேவைகளை பற்றி விளக்கினர்.இதில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், விதைகள் மற்றும் உரங்களின் இருப்புநிலை, சந்தை நிலவரம், வானிலை அறிவுரைகள், இயற்கை பண்ணை பொருட்கள், அணை நீர்மட்டம், வேளாண் செய்திகள், பயிர் காப்பீட்டு திட்டம், பூச்சி அல்லது நோய் கண்காணிப்பு மற்றும் பரிந்துரை இதுபோன்ற 22 வகையான சேவைகளை இந்த செயலி உள்ளடங்கும் . இதைனைப் பற்றிய தகவல்களை விவசாயிகள் தங்களது கைபேசி மூலமாகவே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்பதனை தெரிவித்தனர் .

இந்த செயல்முறையாக அமிர்தா வேளாண்மை மாணவர்கள் சிறப்பாக நடத்தி காண்பித்தனர். இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் கல்லூரியின் முதல்வர் சுதீஷ் மணாலில் அவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள், மார்த்தாண்டன் , பூபதி, வனிதா வழங்கினர்.