75 வது சுதந்திர தினப் பேரணி

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோவை மாவட்ட காவல் துறை இணைந்து நடத்தும் 75-ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், கொடியசைத்து பேரணியை துவக்கிவைத்தார். கல்லூரி செயலரும் இயக்குனரான வாசுகி மற்றும் கல்லூரி முதல்வர் லச்சுமணசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கல்லூரி இசைக்குழுவைச் சேர்ந்த மாணவர்களும் தமிழ்த்துறை பேரரசிரியர் மணிமேகலை மகாகவி பாரதியின் தேசபக்தியின் பாடல்களை பாடினார்.

கல்லூரி தொடங்கிய பேரணி மேட்டுப்பாளையம் சாலை வழியாகச் சென்று துடியலூர் பேருந்து நிலையத்தை அடைந்தது. மேலும் அங்கு தமிழர் பண்பாட்டை விளக்கும் வகையில் சிலம்பம், பறை, கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பேரணி மீண்டும் கல்லூரியை வந்து அடைந்தது. பேரணியில் கலந்துகொண்ட மாணவர்கள் வந்தே மாதரம் என்று முழக்கமிட்டபடி வந்தனர். இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்களும் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் பங்கேற்றினார்.