தி.மு.க. சரித்திர வெற்றி பெற உழைப்போம் -கோவை  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சூலூர் சந்திரசேகரன் .

கோவை அடுத்த சூலூர் பகுதியில் உள்ள வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மண்டல தலைவர் சூலூர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்த தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர்களிடையே உரையாற்றிய அவர் வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு  வணிகர் நலவாரியம் அமைத்ததுடன் பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி உள்ளார் எனவும் அதிமுக மற்றும் பாஜக எந்தவிதமான நன்மைகளையும் வணிகர்களுக்கு

செய்யவில்லை என்றார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன் அறிவித்த வாக்குறுதியை தேர்தல் முடிந்த பின் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் அறிவித்த கோரிக்கைகளை நிறைவேற்றியதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மண்டல தலைவர் சூலூர் சந்திரசேகரன் கூறுகையில் சூலூர் வியாபாரிகள் சங்கத்தில் கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்கு சேகரிக்க தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி வருகை புரிந்தார் எனவும் அமைச்சரின் வருகை வியாபாரிகள் சங்கத்திற்கு பெருமை சேர்க்க கூடிய ஒன்று என்றார்.சூலூர் வியாபாரிகள் சங்கம் மற்றும் பொறுப்பில் உள்ள கோவை மண்டலம் நான்கு மாவட்டங்களிலும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்கு சேகரிக்க உறுதி பூண்டு இருப்பதாக தெரிவித்தார்.

அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து இரண்டாவது சுதந்திர போராட்டமாக இந்த தேர்தலை கருதி நாட்டை காக்க அழைக்கிறேன் என்ற முதல்வரின் அறைக்கூவலை ஏற்று இந்த நாட்டை காக்க பாடுபடுகின்ற விதமாக நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற வணிக பெருமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திமுக வேட்பாளரை வெற்றி வேட்பாளராக பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெறுவதற்கு உழைப்போம் என உறுதி பூண்டு உத்தரவாதம் தந்துள்ளதாக அப்போது தெரிவித்தார்.