வி.எல்.பி கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு வி.எல்.பி ஜானகியம்மாள் கலை கல்லூரி சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்வினைக் குனியமுத்தூர் பி4 காவல் நிலைய ஆய்வாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், கல்லூரி முதல்வர் சதீஷ்குமார் தலைமையேற்று சர்க்கரை நோய் விழிப்புணர்வை வழங்கினார்.

கோவைப்புதூர் பிரிவிலிருந்து  நடைபெற்ற இப்பேரணியில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட பலகைகளும் பதாகைகளும் கையாளப்பட்டன.

இப்பேரணியானது, சர்க்கரை நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், அதற்குரிய சிகிச்சைகள் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் இடம்பெற்றது. இதில், குறிச்சி லயன்ஸ் கிளப், இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் 324 சி செயலாளர் மதிவண்ணன் மற்றும் லயன்ஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.