அம்பானி, அதானி மீது மட்டுமே மோடிக்கு அக்கறை – திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்களுக்கு சர்வதேச அடையாளத்தை வழங்கிய மோடி அரசு, கோவை விமான நிலையத்தை 2,000 கோடியில் விரிவாக்கம் செய்ய விரும்பவில்லை: கோவை மக்களவை திமுக வேட்பாளர் கணபதி ப ராஜ்குமார் .

கோவை மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர் கணபதி ப ராஜ்குமார், உருமாண்டம்பாளையம் தேர்தல் பிரசாரத்தில், “முகேஷ் அம்பானி மகன் திருமணத்திற்காக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள பாதுகாப்புப் விமான நிலையத்துக்கு மோடி அரசு பத்தே நாடகளில் சர்வதேச அங்கீகாரம் அளித்துள்ளது, ஆனால் கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 2,000 கோடி வழங்க விருப்பம் இல்லை”, என்றார் .

மேலும் அந்த பெரிய நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்? பங்குதாரர்களா, யாராவது வந்து அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்களா எனவும் கேள்வி எழப்பினார்.

மோடி அரசாங்கம் அம்பானி மற்றும் அதானிக்காக மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என்று வேட்பாளர் கூறினார்.

காலை 8 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ராஜ்குமார், உருமாண்டம்பாளையம் தொகுதியில் பொதுமக்களிடம் பேசினார். நகரின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதாகவும், பல்வேறு வெற்றிகரமான திட்டங்களை செயல்படுத்துவதாகவும் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

மேலும், திமுகவின் வெற்றிகரமான திட்டங்களைப் பட்டியலிட்டு வாக்குகளைக் கேட்ட வேட்பாளர், ஆட்சிக்கு வந்தால் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக உறுதியளித்தார்.