சர்வதேச விமான போக்குவரத்து துறையின்  சாதனையாளர்களின் விருது

நேரு விமானவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் கல்லூரியின் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா 28 மார்ச் 2024 அன்று சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு நேரு கல்வி குழுமத்தின் தலைமை செயலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பாலாஜி வரவேற்புரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தின் இயக்குநர் செந்தில் வளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கெளரவ விருந்தினராக SKAL சங்கத்தின் தலைவர் அருண்குமார் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். விழாவில் நேரு கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் நாகராஜா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் முதுகலை வணிக நிர்வாக துறையின் துறைத்தலைவர் மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மல்லிகா நன்றியுரை வழங்கினார்.

விழாவில் சாதனைபுரிந்த 53 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் அகில இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த முதுகலை மாணவர்கள் கிஷோர் மற்றும் அபிமென்யூ பாராட்டப்பெற்றனர். விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டிலேயே விமானவியல் துறையில் 57 வருடங்களைக் கடந்து இன்றும் பல சாதனையாளர்களை உருவாக்குவதில் நேரு கல்வி குழுமம் முதன்மை பங்களிப்பதில் பெருமை கொள்கிறது.